கோவையில் சிறுசேமிப்பில் அதிக வசூல் செய்தவர்களுக்குச் சான்றிதழ்!..

published 1 year ago

கோவையில் சிறுசேமிப்பில் அதிக வசூல் செய்தவர்களுக்குச் சான்றிதழ்!..

கோவை: மாநகராட்சி,நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் சிறுசேமிப்பில் அதிக வசூல் சாதனை புரிந்த நிலைமுகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சிறுசேமிப்பு துறையின் சார்பில் 2021-22 ஆம் ஆண்டில் சிறுசேமிப்பில் அதிக வசூல் சாதனை புரிந்த நிலைமுகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மண்டல உதவி இயக்குநர்(சிறுசேமிப்பு) எஸ்.ஞான சேகரன் கலந்துகொண்டார்.

இதில் முதல்பரிசாக 3000 மற்றும் கேடயமும், இரண்டாம் பரிசாக 2000 மூன்றாம் பரிசாக 1000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களும், மாநகராட்சி மண்டல பகுதிகள், பாராட்டு பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிகள், அனைத்து வட்டாரங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த மகளிர் முகவர்களுக்கு தலா 1000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe