நோயாளிகளாக மாறும் குழந்தைகள் அதிர்ச்சி கொடுக்கும் மருத்துவர்கள்..!

published 2 years ago

நோயாளிகளாக மாறும் குழந்தைகள் அதிர்ச்சி கொடுக்கும் மருத்துவர்கள்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை: இறைவனால்   படைக்கப்பட்ட இந்த உலகத்தை  ஆள்பவர்கள் மனிதர்கள். இந்த நவீன காலத்தில் அவர்கள் சந்தோசமாக உள்ளார்களா? என்பது சந்தேகமே மனிதர்கள்  மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்.?

மகிழ்ச்சியான மனிதர்களுக்கு என்ன தேவை ? மூன்று நேரம் உணவு, குடிக்க தண்ணீர், நிம்மதியான உறக்கம். உடல் உழைப்பு என்று தான் பண்டைய காலத்தில் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். இதனால் அவர்கள்  ஒரு தம்பதிக்கு சுகப்பிரசவத்தில் 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றார்கள். 

ஆனால் இன்று நடப்பது என்ன? தற்போது உள்ள நவீன வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மனிதன் பல இன்னல்களைச் சம்பாதித்து வருகிறான். குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை இந்த நவீன காலத்தில் நோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.  

பல்வேறு காரணங்களால் மனிதன் இன்பத்தை இழந்து பல துன்பங்களைச் சந்தித்து வருகின்றான். இதற்கு குழந்தைகள் மட்டும் விதிவிலக்கு அல்ல. அதற்கு நாம் வாழும் வாழ்க்கை முறையே காரணம் இப்படி இருக்கும் சூழ்நிலையில் நாம் இந்த உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

தற்காலத்தில் குழந்தைகள் விரைவில் நோயாளிகளாக மாறி வருகிறார்கள் என்று கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்கள் மருத்துவர்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நாம் குழந்தைகளையும் கல்வி என்ற பெயரில் பல சுமைகளை தூக்க சொல்கிறோம் . குழந்தைகளை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் நாம் வளர்ப்பதற்கு செய்ய வேண்டியவை என்ன? உடற்பயிற்சி நம் வாழ்வில் முக்கியமான ஒன்று நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. சைக்கிள் ஓட்டுவது மைதானத்தில் ஓடி ஆடி விளையாடுவது நண்பர்களுடன் குதித்து மகிழ்வது இதுவும் ஒரு வகை உடற் பயிற்சி தான். இவற்றோடு முறையான உடற்பயிற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம் உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் முழுமையான உடற்பயிற்சி இந்த 400 தசைகளையும் சுறுசுறுப்பாக வைத்து இருப்பதுடன் நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும். 

உயரமான தோற்றம் ஆரோக்கியமான உடல் நலத்தை பெற உடற்பயிற்சிகளே நிர்ணயிக்கின்றன என்பதால் உடற்பயிற்சியை தவிர்க்காமல் அனைவரும் செய்ய வேண்டும். அவ்வாறு தினசரி செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும் வாழலாம்." என்றனர். 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe