பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளது- வானதி சீனிவாசன் பேட்டி..

published 1 year ago

பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளது- வானதி சீனிவாசன் பேட்டி..

கோவை: கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.

  23 வயதான ஷர்மிளா பயணிகள் பேருந்தைத் திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த வானதி சீனிவாசன் ஷர்மிளாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடினார். 

இது குறித்துப் பேட்டியளித்த பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என எண்ணி இருந்த நிலையில் இன்று நேரம் கிடைத்தவுடன் அதே பேருந்தில் பயணித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாகவும், பேருந்தில் பயணம் செய்து நீண்ட காலம் ஆன நிலையில் தற்போது மீண்டும் பேருந்தில் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். 

அதே சமயம்  பெண் பேருந்து ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது மகளிர் அணித் தலைவியாகப் பெருமிதமாக உள்ளது என்றார். மேலும் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதைக் கூற வேண்டும் என்பதுதான் தனது நோக்கமாக உள்ளது எனத் தெரிவித்தார். 

பின்னர் இது குறித்துப் பேசிய பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேருந்தில் வந்திருந்தது மிகுந்த ஆச்சரியம் அளித்ததாகவும் தன்னுடன் சிறிது நேரம் கலந்துரையாடி தனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe