கோவையில் லூலூ மால் திறக்கப்படுவது எப்போது? தேதி அறிவிப்பு

published 1 year ago

கோவையில் லூலூ மால் திறக்கப்படுவது எப்போது? தேதி அறிவிப்பு

தமிழகத்தில் கோவை மாநகர் மிகவும் வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய மாவட்டமாக சென்னைக்கு அடுத்தபடியாக திகழ்ந்து வருகிறது. தொழில், கல்வி, மருத்துவம் என பலவற்றிலும் தனித்த சிறப்பை கொண்டுள்ளது. முதல் நிலை நகரங்களில் மட்டுமே இருந்த வந்த தகவல் தொழில்நுட்பம் (IT), இரண்டாம் நிலை நகரான கோவையிலும், பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் அதிகப்படியான வேலை வாய்ப்பு பெருகி உள்ளது.

கோவையின் சிறப்பாக பல அடையாளங்கள் தோன்றி விட்டன. அதில் இன்னொரு மகுடமாய் அமைய உள்ளது லுலு மால் என அழைக்கப்படும் லுலு ஹைப்பர் மார்க்கெட் (lulu hypermarket).

கோவையில் பல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என ஷாப்பிங் செய்வதற்கும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் பல இடங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைய உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமை இடமாக கொண்ட இந்த லுலு நிறுவனம் தமிழகத்தில் தனது வணிகத்தை கோவையில் தான் முதன் முதலாக தொடங்குகிறது. இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ளது..

தமிழநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் UAE., க்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) சுற்றுப்பயணம் சென்றிந்தார். அப்போது லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 3500 கோடி முதலீட்டை செய்வதற்க்கான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைய திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் தான் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைவதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில் தான் லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெறும் என கோவை மக்கள் எதிர்பார்த்த தருணத்தில் தான் அதுகுறித்தான ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

லூலூ மால் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்துகொண்டு திறந்து வைக்கிறார் என லூலூ நிறுவனத்தின் தென்னிந்திய செய்தித்தொடர்பாளர் மணி ஷங்கர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe