கோவையில் நாய் பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம்

published 1 year ago

கோவையில் நாய் பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம்

கோவை: கோவையில் நாய் பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறக்கப்பட்டது.

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய், பூனை களுக்கான  மின்மயானம் துவங்கப்பட்டுள்ளது.

இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, 
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாய்களுக்கான மின் மயானம், தனியார் அமைப்பு மூலமாக, கோவையில் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

தங்களது வீட்டில் வளர்க்கும் நாய் பூனைகளை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்க பட்டுள்து.

மேலும், இங்கு சாலையில் உயிரிழக்கும் தெரு நாய்களை இலவசமாக தகனம் செய்து கொள்ளவும் ஒரு நாளைக்கு ஆறு நாய்கள் எரியூடப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின் மயானம் தற்போது முழுக்க முழுக்க, எல்.பி.ஜி கேஸ் மூலமாக இறந்த விலங்குகளின் முழு   கழிவுகளும் முற்றிலும் எரிக்கப்பட்டு அதன் மாசு வெளியே போகாமலும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார முறைகேடுகளும் இல்லாமல் மேலே புகை செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீட்டு நாய்கள், பூனைகளை  இங்கு எரியூட்ட எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்,

எல்.பி.ஜி கேஸ் செலவு பிற செலவுகளை கனக்கிட்டு அதற்கான கட்டணத் தொகை அறிவிக்கபடும்.


மேலும் மாநகரில் , சாலை ஓரங்களில் உயிரிழக்கும், நாய் பூனைகளை, யார் வேண்டுமானாலும் இங்கு  கொண்டு வரலாம். மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றதில், தோராயமாக ஒரு லட்சத்திற்கும் மேல் தெருநாய்கள் உள்ளன.  கோவை புறநகர் பகுதியிலும் மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe