பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி செய்ய ரெடியா கோவை மக்களே..?

published 2 years ago

பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி செய்ய ரெடியா கோவை மக்களே..?
  • ATJ

கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது.

உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. 


செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டிலும், செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

இக்குளங்களில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஒட்டத்தில் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு இருந்தது. நிரந்தரமாக படகு சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி தொடர்பாக வல்லுநர் குழுவின் திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. விரைவில் திட்ட அறிக்கை தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்படும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe