கோவையில் காய்கறிகள் விலை தீடீர் உயர்வு,, எந்த காய் என்ன விலை.?

published 1 year ago

கோவையில் காய்கறிகள் விலை தீடீர் உயர்வு,, எந்த காய் என்ன விலை.?

கோவை: விளைச்சல் குறைவு காரணமாக கோவையில் காய்கறிகள் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு கோவையில் தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்தும், கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதனால் தியாகி குமரன் மார்க்கெட் எப்போதும் மக்கள்  நடமாட்டம் மிகுந்த இடமாக இருக்கிறது.

இதனிடையே கோவையில் தற்போது காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மார்க்கெட் வெறிச்சோடி வருகிறது. வெயில் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகள் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தியாகி குமரன் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், உருளைக்கிழங்கு ரூ.25க்கும், வெங்காயம் ரூ.50க்கும், கத்தரிக்காய் ரூ.50க்கும், வெண்டைக்காய் ரூ.50க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும், பீட்ரூட் ரூ.30க்கும், கேரட் ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து காய்கறி வியாபாரி மணிகண்டன் கூறுகையில், "விளைச்சல் குறைவு கரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறி  வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறி வாங்கவே மக்கள் தயங்கி வருகின்றனர். ஒரு கிலோ காய்கறி வாங்குபவர்கள் விலை உயர்வு காரணமாக அரை கிலோ மட்டுமே வாங்கி செல்கின்றார்கள். வெளி மாநிலங்களில் வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து விட்டது. உள்ளூர் விளைச்சலிலும் பாதி மட்டுமே வரத்து உள்ளது. விற்பனையும் மந்தமாக உள்ளது." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe