கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு கோவையில் அதிமுக நிர்வாகி மனைவியுடன் கைது!..

published 1 year ago

கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு கோவையில் அதிமுக நிர்வாகி மனைவியுடன் கைது!..

கோவை :கோவை ராமநாதபுரம் கருப்பண்ண வீதியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 33). இவர் திருமணம், காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேசன் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில், அவர் கடந்த 2017ம் ஆண்டு ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற சுரேஷ் - கீதாமணி தம்பதியின் மகள் காதணி விழாவிற்கு டெக்கரேஷன் செய்து கொடுத்தார். அப்போது வீரக்குமாருக்கும், கீதாமணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு வீரக்குமாருக்கும், ஜனனி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

 ஜனனி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தனது கணவரின் கள்ளக்காதல் விவகாரம் ஜனனிக்கு தெரிய வந்தது. இதனால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கருத்து வேறுபாடு காரணமாக ஜனனி தனது கணவர் வீரக்குமாரை பிரிந்தார்.

 கடந்த மூன்று மாத காலமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீரக்குமார் தனது மனைவி ஜனனிக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டு குடும்பத்திற்கும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கீதாமணி தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு ஆறு மாதங்களுக்கு முன்பு பேரூர் ஆண்டி பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 

அங்கு கீதாமணி தனது தந்தை சுப்பிரமணியன்(65). (இவர் வேடப்பட்டி பகுதி அதிமுக அம்மா பேரவை செயலாளர்), தனது தாய் தங்கமணியிடம், நான் வீரக்குமாருடன் சேர்ந்து வாழப்போவதாகவும், அவருடன் என்னை சேர்த்து வைக்கும்படி கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வந்து பேசுமாறு கீதாமணி வீரக்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். 

அதன் பேரில் வீரக்குமாரும், தனது கடையில் வேலை பார்க்கும் ராம்குமார், சதீஷ்குமார் ஆகியோருடன் வேலாண்டிபாளையத்தில் உள்ள கீதாமணியின் வீட்டுக்கு சென்றார். அங்கு பேசிக்கொண்டிருந்த பொழுது வீரக்குமாருக்கும், கீதாமணியின் பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அடிதடியாக மாறியது. அப்போது வீரக்குமார், கீதாமணியின் தந்தை சுப்பிரமணியனை தாக்க முற்பட்டார். இதனைதடுக்கும் விதமாக சுப்பிரமணியனின் மனைவி தங்கமணி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வீரக்குமாரின் தலையில் வெட்டினார். 

இதில் அவர் பலத்த காயமடைந்து வலியால் துடித்தார். அவருடன் வந்தவர்கள் அவரை காரில் ஏற்றி  பேரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வீரக்குமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பேரூர் வேலாண்டி பாளையத்தை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை செயலாளர் சுப்ரமணியன்(65), அவரது மனைவி தங்கமணி(57) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
____________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe