ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது குட்டி சுட்டி..

published 1 year ago

ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது குட்டி சுட்டி..

கோவை: கோவையை சேர்ந்த மூன்று வயது சிறுமி மூன்று விதமான ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாண்டு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.

விளையாட்டுத் தனமும், சின்னசின்ன குறும்புகளும் கொட்டிக் கிடக்கும் மனங்களை கொண்டவர்கள் தான் குழந்தைகள். என்னதான் குறும்புகள் செய்தாலும், சில குழந்தைகள் பெரியவர்களை காட்டிலும் அசாத்திய திறமைகள் மற்றும் ஞாபக திறனை கொண்டு நம்மை அசர வைத்து விடுகிறார்கள். 

அந்த வகையில் 3 ரூபிக்ஸ் க்யூப்களை அசால்டாக கையாண்டு அலட்டிக்கொள்ளாமல் 'டன்' என்று கூறி முடிக்கிறார் கோவையைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி அஹன்யா.

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சோபி ஆனந்தி-விஜய் ஆனந்த் தம்பதியினர். இவர்களுக்கு அன்வியா என்ற 8 வயது மகளும், அஹன்யா 3 வயது மகளும் உள்ளனர். அன்வியா சிறு வயதில் இருந்தே ரூபிக்ஸ் க்யூப்களை கையாண்டு வந்துள்ளார். 

இதனைப் பார்த்த 3 வயது சிறுமி அஹன்யா, அக்காவுடன் சேர்ந்து தானும் களைந்திருக்கும் ரூப்க்ஸ் க்யூப்களை சரிசெய்ய முயற்சித்துள்ளார்.

நாள்பட சிறிது நேரத்திலேயே ரூபிக்ஸ் க்யூப்களை சரி செய்துள்ளார். தற்போது 2*2 மற்றும் 3*3 மற்றும் பிரமிடு வடிவிலான ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாண்டு வருகிறார் இந்த சிறுமி.

 இவரது அசாத்திய திறமை இண்டர்நேசனல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.  மேலும், தமிழ்நாடு க்யூப்ஸ் அசோசியேசன் சிறுமி அஹன்யாவை கௌரவப்படுத்தியுள்ளது.

வலது புறம் எது? இடது புறம் எது? என்று கேட்டாலே குழம்பிப்போகும் வயதில் சிறுமி அஹல்யா அசால்டாக ரூபிக்ஸ் க்யூப்களை கையாள்வது தங்களுக்கே ஆச்சரியமாக உள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe