கஞ்சா குற்றவாளிகளுக்கு தலா 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறை 6,00,000 அபராதம்

published 1 year ago

கஞ்சா குற்றவாளிகளுக்கு தலா 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறை   6,00,000 அபராதம்

கோவை :கோவை மாவட்டம் சூலூர் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஜெயபாண்டியம்மாள் (30) மற்றும்  ராஜேஷ் கண்ணன் (42) ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு வீட்டில் 50 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கோவை Essential Commodities Act Court சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இருவருக்கும் தலா 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும்  6,00,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரிகள் மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe