கரகாட்டத்தில் ஆபாசம் தலை விரித்து ஆடுகிறது - தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர் சங்கம்

published 1 year ago

கரகாட்டத்தில் ஆபாசம் தலை விரித்து ஆடுகிறது - தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர் சங்கம்

கோவை: தேர்தல் வரும் போது மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் கண்ணுக்குத் தெரிவதாகத் தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர் சங்கத்தின் கோவையில் உள்ள தனியார் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் மாநில தலைவர் அஜித்ராஜா, கோவில்களில் ஆபாச நடனம் ஆடக் கூடாது என எங்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோவில்களில் ஆபாச நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. 

இது ஒரு மகிழ்ச்சிகரமான தீர்ப்பு. அதற்கு அந்த நீதியரசர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே தங்கள் தொழில் இருக்கும். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தான் அடுத்த ஆறுமாதம் வாழ்வாதாரம் இருக்கும். 

தேர்தல் வரும்போது மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம். தேர்தல் வரும் போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய நாங்கள் தென்படுகிறோம். அதைத் தவிர்த்து அரசு சார்பில் தங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை எவ்வித நலவாரியமும் அமைக்கப்படவில்லை. 

கரகாட்டத்தில் ஆபாசம் தலைவிரித்து ஆடுகிறது, அதற்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் தங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை. தற்போது வரை நிரந்தரம் இல்லாத வாழ்க்கையைத் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அழிவு நிலையில் இருந்த தங்களின் நிலைமை தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் இனி உயரும் என நம்புகிறோம்.

 தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கலைக்குழுக்களுக்கு மட்டும் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். மேலும் குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்.

 ஆபாச நிகழ்ச்சி நடத்துபவர்களுக்குப் பணம் கொடுக்க பலரும் தயாராக உள்ளார்கள் ஆனால், தாங்கள் எல்லாம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், எங்களுக்கு நல்ல தொகை கொடுக்கவோ, உதவி புரியவோ யாரும் முன்வருவதில்லை எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe