உணவு பகுப்பாய்வில் கூடுதல் கமிஷனர் ஆய்வு..!

published 1 year ago

உணவு பகுப்பாய்வில் கூடுதல் கமிஷனர் ஆய்வு..!

கோவை:கோவை மண்டல உணவு பகுப்பாய்வகத்தை, உணவு பாதுகாப்பு துறை கூடுதல் கமிஷனர் தேவபார்த்தசாரதி நேற்று ஆய்வு செய்தார்.கோவை மண்டல உணவு பகுப்பாய்வகம், ரேஸ்கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.

 

இந்த பகுப்பாய்வகங்களில், கலப்படம், உணவின் காலாவதி நிலை, குடிநீர், உணவுப் பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்படுகிறது.இதை, உணவு பாதுகாப்பு துறை கூடுதல் கமிஷனர் தேவபார்த்தசாரதி நேற்று ஆய்வு செய்தார்.

 உணவு பகுப்பாய்வக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கூடுதல் கமிஷனர், அங்கு நடத்தப்படும் ஆய்வுகள், வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆய்வகத்தில் ஆய்வு செய்த அவர், அங்குள்ள வசதிகள், மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

 ஆய்வுகளை விரைந்து மேற்கொண்டு, முடிவுகளை பெற அறிவுறுத்தினார்.அப்போது, உணவுபகுப்பாய்வாளர் ஷீலா, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe