நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட 50 ஆயிரத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு..!

published 1 year ago

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட 50 ஆயிரத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு..!

கோவை :மேட்டுப்பாளையம்;நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தவறவிட்ட, 50,000 ரூபாயை, பயணியிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

 

பணத்தை எடுத்து கொடுத்த காவலருக்கு, அதிகாரிகள் பாராட்டுதெரிவித்தனர்.சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் பாக்கியராஜ், 45 ; டீ தூள் வியாபாரி. இவர் வியாபாரம் சம்பந்தமாக, ஊட்டி செல்ல நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தார்.

 அயர்ந்து தூங்கியதில், இவர் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, 50 ஆயிரம் ரூபாய், பெட்டியின் நடைபாதையில் தவறி விழுந்து விட்டது.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவலர் முருகன், அப்பணத்தை எடுத்து, மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடம்கொடுத்துள்ளார். பணம் தவறவிட்டதை அறிந்த பாக்கியராஜ், மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ்ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.

 

மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன், தீவிர விசாரணைக்கு பின், பாக்யராஜிடம் பணத்தை கொடுத்துள்ளார். பெட்டியில் இருந்து எடுத்து வந்து கொடுத்த, காவலர் முருகனுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe