ஊட்டி நுழைவாயில் பகுதியில் வழிந்தோடும் கழிவுநீர்..!

published 1 year ago

ஊட்டி நுழைவாயில் பகுதியில் வழிந்தோடும் கழிவுநீர்..!

கோவை : குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டி நகரின் நுழைவு வாயில் சேரிங்கிராஸ் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு மாத காலமாக கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்து ஓடுகின்றது.

 இதன் அருகில் கண் ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது. வயதானவர்களும் சிகிச்சைக்காக வருபவ ர்களும் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் ஆஸ்பத்திரி பின்புறம் கழிவு நீர் தேங்கி செடிகளுக்கு உரமாக நிற்கின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்து போலீஸ் துறையினர் அதற்கான தடுப்பை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். 

ஆனால் பாதசாரிகள் மீதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மீதும் வாகனங்கள் செல்லும் பொழுது கழிவுநீர் தெளித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் காரணமாக பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் துரிதமாக செயல்பட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe