12 ராசிகளுக்குமான இன்றைய (29ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தாமதமான சில பணிகளை செய்வதற்கான சூழல் ஏற்படும். நண்பர்களின் உதவியால் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் நிறைவேறும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அஸ்வினி : ஒற்றுமை மேம்படும்.
பரணி : நம்பிக்கை பிறக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். நிலுவையில் இருந்துவந்த சரக்குகள் விற்பனையாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : காரியங்கள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தை தரும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வெளியூர் தொடர்புகளின் மூலம் மேன்மை ஏற்படும். உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். அடிப்படை தேவைகளை மேம்படுத்துவீர்கள். வியாபார ரீதியான செயல்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும்.
திருவாதிரை : மேன்மை ஏற்படும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : எண்ணங்கள் மேம்படும்.
ஆயில்யம் : வாதங்கள் மறையும்.
---------------------------------------
சிம்மம்
மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் நிறைவேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் குதூகலமான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : சோர்வு குறையும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
துலாம்
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவு எடுப்பதை தவிர்க்கவும். வாகன பயணங்களின் போது விவேகம் வேண்டும். புதிய கூட்டாளிகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மின் சாதனப் பொருட்களில் கவனம் வேண்டும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சித்திரை : பயணங்கள் உண்டாகும்.
சுவாதி : விவேகம் வேண்டும்.
விசாகம் : பொறுப்புகள் மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படலாம். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : விரயங்கள் ஏற்படலாம்.
அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
தனுசு
பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். அரசு வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : மனப்பக்குவம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டை மாற்றி அமைப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
மனதளவில் தைரியம் பிறக்கும். பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கான உதவி கிடைக்கும். உறவினர்களிடையே இருந்துவந்த சலசலப்புகள் குறையும். தந்தை வழியில் உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். தடங்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : தைரியம் பிறக்கும்.
சதயம் : சலசலப்புகள் குறையும்.
பூரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.
---------------------------------------
மீனம்
மனதில் ஒருவிதமான கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நயமான பேச்சுக்களை நம்பி கருத்துகளை பகிர வேண்டாம். பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை ஏற்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : திட்டமிட்டு செயல்படவும்.
---------------------------------------