கோவையில் கடந்தாண்டு ஜி.எஸ்.டி வரி வருவாய் என்ன தெரியுமா..? தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

published 1 year ago

கோவையில் கடந்தாண்டு ஜி.எஸ்.டி வரி வருவாய் என்ன தெரியுமா..? தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

கோவை: கோவை மண்டலத்தில்  ஜி.எஸ்.டி வரியில் கடந்த 6 ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வருவாய் கடந்தாண்டு முதன் முறையாக எட்டியது எனவும்,  அதுவே இதுவரை பெறப்பட்ட  அதிகமான ஜி.எஸ்.டி வருவாய்  என  கோவை ஜி.எஸ்.டி., முதன்மை ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி., தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. மண்டல அலுவலகத்தில் , கோவை ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது:

கடந்த 6 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி வருவாய் 7.19 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 2022-23 நிதியாண்டில் 18.10 லட்சம் கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 1.72 லட்சம் கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ரூ.19 ஆயிரம் கோடி மாதந்திர வரி வருவாய் என்பது கடந்த 2022 ஆம் ஆண்டு 1 லட்சத்து15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. கோவையை பொருத்தவரை 2022ம் ஆண்டில் 3 ஆயிரத்து 3 கோடி ரூபாய் வருவாய் என்ற திட்டமிட்ட இலக்கை எட்டியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் பெறப்பட்ட அதிக வரி வருவாய் இதுவாகும். வரி செலுத்துவோர் எண்ணிக்கையானது கடந்த 2017ம் ஆண்டு 67.83 லட்சமாக இருந்தது. 2023ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது கோவை மண்டலத்தில் தற்போது 1.40 கோடி பேர் ஜி.எஸ்.டி வரி செலுத்துகின்றனர்

வருவாயில் மட்டுமின்றி வரி ஏய்ப்பு, வரியை எளிமையாக செலுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 கோடி வருவாய் கண்டறியப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வரி தாக்கலில் 2022-23ம் ஆண்டு தொடக்கத்தில் 87 சதவீதம் என்பது ஆண்டின் முடிவில் 97 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.  சேவை வரி, கலால் வரியை பொருத்தவரை 26 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.30 கோடி பெறப்பட்டது. அதில் ரூ.18 கோடி ஜி.எஸ்.டி வருவாயில் மட்டும் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe