Breaking News : Swiggy ஊழியரை தாக்கிய பீளமேடு போலீஸ்காரர் கைது..!

published 2 years ago

Breaking News : Swiggy ஊழியரை தாக்கிய பீளமேடு போலீஸ்காரர் கைது..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில்(Swiggy) வேலை செய்து வருகிறார். தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகவும், அதனை கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் இதற்கு ஒரு நீதி வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி(நேசனல் மாடல்) வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும் அந்த வாகனத்தை தான் வழிமறைத்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டு கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், "இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்" என கேட்டு  தன்னை தாக்கியதாக தெரிவித்தார். 

 

மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என கேட்டு பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு சிறிது நேரம் கழித்து அனுப்பியதாக தெரிவித்தார். 

 

அந்த பெண் இது குறித்து கேட்டபோதும் போக்குவரத்து காவலர் அப்பெண்ணையும் நீங்கள் செல்லும் படி அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.

தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டி கேட்டதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாமற்ற செயல் என்றும்  இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 அந்த காவலர் ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

 

இந்த நிலையில் ஊழியரை தாக்கிய சதீஷ் என்ற போலீஸ்காரர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe