கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்- பூக்கள் கொடுத்து வரவேற்பு..!

published 1 year ago

கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்- பூக்கள் கொடுத்து வரவேற்பு..!


கோவை:
தமிழகத்தில் இன்று முதல் அரசு கலை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்குகின்றன. அதன் படி கோவையிலும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரி, தொண்டாமுத்தூர் அரசு கலை கல்லூரி, புலியகுளம் அரசு கலை கல்லூரி ஆகியவற்றில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அரசு கல்லூரிக்கு முதல் நாள் வருகை புரிந்த மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் ரோஜா பூ, சந்தனம், பன்னீர் தெளித்து வரவேற்பு அளித்தனர்.
இக்கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டில் 1626 இடங்களில் 1494 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் மீதமுள்ள இடங்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இன்று முதல் 7ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
______________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe