அம்ருத் 2.0 திட்டம் குறித்தான உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்- பாஜகவினர் மனு.

published 1 year ago

அம்ருத் 2.0 திட்டம் குறித்தான உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்- பாஜகவினர் மனு.

கோவை:

 

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அம்ருத் 2.0 திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையாக உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென பெரியநாயக்கன்பாளையம் பாஜக நகர் மண்டல் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் பாஜக நகர் மண்டல் தலைவர் மகேந்திர ராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்த சமூக வலைத்தளமான "நம்ம பெரியநாயக்கன்பாளையம்" என்ற முகநூலில் பணிகள் தொடங்கியுள்ளது என்ற செய்தி ஒன்றாம் தேதி அன்று வெளியாகி உள்ளது எனவும் இந்தத் திட்டத்தை பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

 மேலும் இத்திட்டத்திற்காக தொடக்க விழாவோ பூமி பூஜையோ நடத்தப்படவில்லை, அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை அதன் மதிப்பீடும் தெரியப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்த திட்டமானது எப்பொழுது துவங்கப்படும்? இத்திட்டம் மத்திய அரசின் திட்டமா அல்லது மாநில அரசின் திட்டமா என்று மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை எனவும் இதன் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe