தக்காளி விலை உச்சம் தமிழக அரசு அவசர ஆலோசனை..!

published 1 year ago

தக்காளி விலை உச்சம் தமிழக அரசு அவசர ஆலோசனை..!

கோவை :

தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு திங்கள்கிழமை (ஜூலை 3) அவசர ஆலோசனை நடத்தவுள்ளது.

 

கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொது மக்கள் பாதிக்காமல் இருப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கூட்டுறவுத் துறை சாா்பில், மாநிலத்தில் இயங்கும் 65 பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை குறைவு என்பதால், பொது மக்கள்அதிகளவு திரள்வதால், பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி விரைவாக விற்றுத் தீா்ந்து விடுகிறது. இந்த கடைகளை அணுக முடியாத பொது மக்கள் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு தக்காளியை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தேவைப்பட்டால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை, நியாய விலைக் கடைகள் மூலமும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

 

இந்த நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக, தமிழக அரசு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது. தலைமைச் செயலகத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. இதைத் தொடா்ந்து, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைப்பு தொடா்பான நடவடிக்கைகளை முதல்வா் வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

சென்னையில்கிலோ ரூ.130 சென்னையில் மொத்த விற்பனை அங்காடியான  கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டதால், இல்லத்தரசிகள் தவிப்புக்குள்ளாகினா். சென்னையைப் போல மதுரை, திருச்சி, கோவை போன்ற பல்வேறு நகரங்களிலும் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe