தங்கம் விலை சரிவு.. தங்கம் வாங்க இது சரியான நேரமா..? மிடில் கிளாஸ் மக்கள் செய்ய வேண்டியது என்ன..?

published 1 year ago

தங்கம் விலை சரிவு.. தங்கம் வாங்க இது சரியான நேரமா..? மிடில் கிளாஸ் மக்கள் செய்ய வேண்டியது என்ன..?

கோவை :

இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் பொருத்த வரையில் தங்கம் என்பது நீண்ட கால முதலீடு, குறைந்தது 10 முதல் 15 வருடமாவது வாங்கிய தங்கத்தை முதலீடுக்காகவும், பெரிய வழக்கத்தை கொண்டு உள்ளனர்.

பத்திரமாக பாதுகாத்து அதை பெரிய செலவுகளுக்காகவும் பயன்படுத்தும் இதனால் தங்கம் விலை சரியும் போது நடுத்தர மக்கள் மத்தியில் இருந்து பெரும் தொகை தங்கம் மீது குவியும்.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும், இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தின் மந்தநிலை இருந்தது. இதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.

இதை ஈடுக்கட்ட அதிகளவிலான முதலீடுகளை அரசும், தனியார் முதலீட்டாளர்களும் செய்தனர். ஆனால் அப்போது 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் ரெசிஷன் அச்சத்தையும் தாண்டி ஜிடிபியில் 2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அளவீடும் சரிந்துள்ளது, இதனால் ரெசிஷன் அச்சம் வேகமாக மறைந்துள்ளது.

இந்த நிலையில் தான் தங்க முதலீட்டு சந்தையில் இருந்து பங்குச்சந்தைக்கு அதிகளவிலான முதலீடுகள் மாறியது, இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. தங்கம் விலையில் கடந்த வாரம் இருந்த சரிவு பாதை, இந்த வாரமும் தொடர்கிறது. இதனால் தங்கம் வாங்குவோருக்கு நல்ல காலம் பிறந்துள்ளது.

திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை பதிவான 1892 டாலர் என்ற பெரும் சரிவில் இருந்து தற்போது 1916 டாலர் அளவில் காலை வர்த்தகத்தில் மீண்டது. இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 1919 டாலர் அல்லது 157, 067 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டுகிறகு.

MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 0.19 சதவீதம் சரிந்து 58,099 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் 70,030 ரூபாயாக உள்ளது. இன்றைய வர்த்தககத்தில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 54,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 58,960 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் அதிகரித்து 43,240 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 71900 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 54,350 ரூபாய், மும்பை - 54,050 ரூபாய், டெல்லி - 54,200 ரூபாய், கொல்கத்தா - 54,050 ரூபாய், பெங்களூர் - 54,050 ரூபாய், ஹைதராபாத் - 54,050 ரூபாய், கேரளா - 54,050 ரூபாய், புனே - 54,050 ரூபாய், பரோடா - 54,100 ரூபாய், அகமதாபாத் - 54,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,200 ரூபாய், லக்னோ - 54,200 ரூபாய், கோயம்புத்தூர்- 54,350 ரூபாய், மதுரை - 54,350 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,290 ரூபாய், மும்பை - 58,960 ரூபாய், டெல்லி - 59, 120 ரூபாய், கொல்கத்தா - 58,960 ரூபாய், பெங்களூர் - 58,960 ரூபாய், ஹைதராபாத் - 58,960 ரூபாய், கேரளா - 58,960 ரூபாய், புனே - 58,960 ரூபாய், பரோடா - 59,020 ரூபாய், அகமதாபாத் - 59,020 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,120 ரூபாய், லக்னோ - 59,120 ரூபாய், கோயம்புத்தூர் - 59,290 ரூபாய், மதுரை - 59,290 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 43480 ரூபாய், மும்பை - 43240 ரூபாய், டெல்லி - 43360 ரூபாய், கொல்கத்தா - 43240 ரூபாய், பெங்களூர் - 43240 ரூபாய், ஹைதராபாத் - 43240 ரூபாய், கேரளா - 43240 ரூபாய், புனே - 43240 ரூபாய், பரோடா - 43280 ரூபாய், அகமதாபாத் - 43280 ரூபாய், ஜெய்ப்பூர் - 43360 ரூபாய், லக்னோ - 43360 ரூபாய், கோயம்புத்தூர் - 43480 ரூபாய், மதுரை - 43480 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 75500 ரூபாய், மும்பை - 71900 ரூபாய், டெல்லி - 71900 ரூபாய், கொல்கத்தா - 71900 ரூபாய்,

பெங்களூர் - 71500 ரூபாய், ஹைதராபாத் - 75500 ரூபாய், கேரளா - 75700 ரூபாய், புனே - 71900 ரூபாய், பரோடா - 71900 ரூபாய், அகமதாபாத் - 71900 ரூபாய், ஜெய்ப்பூர் - 71900 ரூபாய், லக்னோ - 71900 ரூபாய், கோயம்புத்தூர் - 75500 ரூபாய், மதுரை - 75500 ரூபாய்.

தற்போதைய வர்த்தக சூழ்நிலையை பார்க்கும் போதும் தங்கம் விலை தொடர்ந்து சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு காத்திருந்து வாங்குவது உத்தமம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe