வானதி சீனிவாசன் குறித்து அவதூறு பதிவு- பாஜக மகளிரணியினர் புகார்..!

published 1 year ago

வானதி சீனிவாசன் குறித்து அவதூறு பதிவு- பாஜக மகளிரணியினர் புகார்..!

கோவை

 

பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக வீடியோ பதிவு வெளியிட்ட திமுக பிரமுகரான குடியாத்தம் குமரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், திமுகவினரை தாக்கி பேசியிருந்தார். அவரது பேச்சு ஒட்டுமொத்த திமுகவினரை அவமரியாதை செய்வதாக திமுக வினர் கடந்த இரு தினங்களாக பல்வேறு இடங்களில் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் கிங் 360 என்ற youtube சேனலில் திமுகவை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வானதி சீனிவாசன் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி கோவை மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தனர்.

அப்போது பேசிய ஜெயஸ்ரீ தங்களது கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக வை சேர்ந்த  குடியாத்தம் குமரன் என்பவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த வீடியோவை யூடியூப் தளத்திலிருந்து நீக்கம் செய்வதுடன் கிங் 360 என்ற  youtube ஐ முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe