கோவையில் நடைபெற உள்ளது செல்ல பிராணிகள் கண்காட்சி

published 1 year ago

கோவையில் நடைபெற உள்ளது செல்ல பிராணிகள் கண்காட்சி

கோவை: கோவை இந்துஸ்தான் கல்லூரியில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

இன்டி பெட் அனிமல் வெல்பேர் சொசைட்டி சார்பாக கோவையில் பெட் கார்னிவல், மற்றும் பூனை கண்காட்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில்  நடைபெற உள்ளது. வரும் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் நடைபெற இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில், பூனை மற்றும் நாய்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் செல்ல பிராணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 200க்கும் மேற்பட்ட நாய்களும், 150க்கும் மேற்பட்ட பூனைகளும், அனைத்து விதமான செல்ல பிராணிகளும் கலந்து கொள்ள உள்ளன. இவை தவிர குதிரைகள், பசுக்கள், காளைகள், பறவைகள், மீன் வளர்ப்பு மற்றும் நாற்றங்கால் பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்  பெறுகின்றன.

இந்தியாவின் விலை உயர்ந்த நாய்கள், வயது மூத்த நாய்கள் இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன. கண்காட்சியின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும்  நடத்தப்பட உள்ளதாகவும், 
இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சிக்கான  நுழைவுச்சீட்டு மற்றும் மேலதிக தகவல்களுக்கு 9842230865 என்ற தொலைபேசி எண் மூலமாக அழைக்கலாம். நுழைவுச்சீட்டுகளுக்கு www.ipaws.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe