சுற்றுசுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி ;கட்டுமான நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

published 1 year ago

சுற்றுசுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி ;கட்டுமான நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

கோவை:

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுசுவர் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில்
கட்டுமான நிறுவன உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ, மாணவிகள் தங்கி படிக்க வசதியாக விடுதி உள்ளது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அருகே சுற்றுசுவர் உள்ளது. இந்த சுவர் கருங்கல்லால் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த சுற்றுசுவரை ஒட்டி 5 அடி தூரத்தில் கான்கிரீட் சுற்றுசுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

கடந்த சில நாட்களாக அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில், ஆந்திரா மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் பழைய கருங்கல்லால் ஆன சுவரை ஒட்டி புதிய சுவர் எழுப்புவதற்காக ஆழமாக அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது திடீரென பழைய கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் கற்களின் இடிபாடுகளில் சிக்கி படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 உடனடியாக ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
குனியமுத்தூர் உதவி கமிஷனர் ரகுபதிராஜா உள்ளிட்ட போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி ஆந்திர மாநிலம் வீரசாகரத்தை சேர்ந்த ரபாகா கண்ணையா(49), கொலி ஜெகநாதன்(35), அவரது அண்ணன் நகீலா சத்யம்(37), மேற்கு வங்கம் கர்தாலாவை சேர்ந்த பிஸ்கோஷ்(20), ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இவர்களின் உடல்கள், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் படுகாயமடைந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பருன்கோஷ் (28), கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கட்டுமான பணியில் ஈடுபட ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 8 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கோவை வந்துள்ளனர்.

 அவர்கள் கோவைப்புதூரில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தனர். மற்றவர்கள் அருகில் கழிப்பறை கட்டும்பணிக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மேலும் சம்பவ இடத்துக்கு கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், மேலாளர் குனியமுத்தூர் ஹீரா நகரை சேர்ந்த சாதிக் குல்அமீர் (40) மற்றும் கட்டுமான நிறுவன பொறியாளர் அன்னூர் பட்டகாரன்புதூரை சேர்ந்த அருணாச்சலம் (40) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். 

அவர்கள் மீது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe