குறைகிறது வந்தே பாரத் ரயில் கட்டணம்..!

published 1 year ago

குறைகிறது வந்தே பாரத் ரயில் கட்டணம்..!

கோவை:

பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வந்தே பாரத் ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் அதிவேக ரயில்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்து வருகிறார்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்புகின்றன. ஆனால், சில ரயில்களில் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

இந்தூர்-போபால், போபால்-ஜபல்பூர், நாகபுரி-பிலாஸ்பூர் உள்ளிட்ட வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது தரவுகள் மூலம் தெரியவருகிறது.

கடந்த ஜூன் மாதம், போபால்-இந்தூர் வந்தே பாரத் ரயில் சேவையில் 29 சதவீதமும், மறுமார்க்கத்தில் 21 சதவீதமும் மட்டுமே இருக்கைகள் நிரம்பியுள்ளன. 3 மணி நேரப் பயணம் கொண்ட இந்த ரயிலில், ஏசி வசதிகொண்ட இருக்கைக்கு ரூ.950, ஏசி வசதிகொண்ட சிறப்பு இருக்கைக்கு ரூ.1,525 கட்டணமாகும். போபால்-ஜபல்பூர் வந்தே பாரத் ரயிலில் 32 சதவீதம், மறுமார்க்கத்தில் 36 சதவீதம், நாகபுரி-பிலாஸ்பூர் ரயிலில் சராசரியாக 55 சதவீதம் என்ற அளவில்தான் பயணிகள் எண்ணிக்கை உள்ளது. போபால்-ஜபல்பூர் ரயிலில் கட்டணங்கள் ரூ.1,055 (ஏசி இருக்கை), ரூ.1,880 (ஏசி சிறப்பு இருக்கை), நாகபுரி - பிலாஸ்பூர் ரயிலில் கட்டணங்கள் ரூ.1,075 (ஏசி இருக்கை), ரூ.2,045 (ஏசி சிறப்பு இருக்கை) என்ற அளவில் உள்ளது.

இதுபோல் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 'அனைத்து வந்தே பாரத் ரயில்களும் பயணிகளுக்கான வசதியை உறுதி செய்ய வேண்டுமென்பதே எங்களது நோக்கம். 2 முதல் 5 மணி நேரம் வரை குறைவான பயண நேரம் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் கட்டணத்தை குறைத்தால், அந்த ரயில்களை அதிகம் போ பயன்படுத்துவர்' என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் இதுவரை 46 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

24 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த ரயில்கள், மற்ற ரயில்களுடன் ஒப்பிடுகையில் சரசாரியாக ஒரு மணி நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.நாட்டிலேயே கேரள மாநிலம், காசர்கோடு-திருவனந்தபுரம் ரயில் சேவைக்குதான் அதிக வரவேற்பு உள்ளது. காந்திநகர்-மும்பை சென்ட்ரல், வாரணாசி-புதுதில்லி, டேராடூன்-அமிருதசரஸ், மும்பை-சோலாபூர் ஆகிய ரயில்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe