டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியானது..!

published 1 year ago

டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியானது..!

கோவை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், டிஐஜி விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் முதல் தூக்கம் வரவில்லை என மாத்திரைகள் எடுத்துக் கொள்வார் என தனி பாதுகாப்பு காவலர் ரவிச்சந்திரன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்..

கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் நேற்று காலை தனது முகாம் அலுவலகத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு  தொடர்பான முதல்  தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. 

அதில் புகாரரான தனி பாதுகாப்பு காவலர் ரவிச்சந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டி ஐ ஜி சரவணன் விஜயகுமார் தனி பாதுகாப்பு காவலராக பணியாற்றி வருவதாகவும், கோவை சரக டிஐஜியாக விஜயகுமார் பொறுப்பேற்ற ஜனவரி மாதம் முதல் தூக்கம் வரவில்லை எனக் கூறி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஆறாம் தேதி இரவு கோவை மாநகர துணை காவல் ஆணையரின் மகன் பிறந்தநாள் விழாவுக்காக சென்று விட்டு வந்ததாக குறிப்பிட்ட ரவிச்சந்திரன் நேற்று காலை ஆறு முப்பது மணி அளவில் ரவிச்சந்திரன் தங்கி உள்ள அறைக்கு வந்து டி எஸ் ஆர் கேட்டதாகவும் பிறகு பால் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து காவலர் ரவி வர்மா காய்ச்சி கொடுத்த பாலை குடித்துவிட்டு, ரவிச்சந்திரன் பிஸ்டலை எடுத்துக் கொண்டு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டே அறையை விட்டு வெளியேறியதாகவும் பிறகு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, தானும் ஓட்டுநர் அன்பழகனும் வெளியே வந்து பார்த்தபோது, தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்து கிடந்தாகவும் அருகில் துப்பாக்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விஜயகுமாரின் மனைவி மற்றும் அன்பழகன், ரவிச்சந்திரன், காவலர் ஸ்ரீநாத் ஆகியோர் விஜயகுமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தாகவும் தெரிவித்துள்ளார்

கோவை அரசு மருத்துவமனையில் டிஐஜி விஜயகுமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்ததாக தனது புகாரில் தெரிவித்துள்ள ரவிச்சந்திரன் எதற்காக சுட்டுக் செய்து கொண்டார் என்பது தொடர்பாக தெரியவில்லை எனவும் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். தற்போது டி ஐ ஜி விஜயகுமார் உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் விஜயகுமார், 
கோவை சரக துணை காவல்துறை தலைவராக பணியமர்த்தபட்டது முதல் தூக்கம் வரவில்லை என மாத்திரைகள் எடுத்துக் கொள்வார் எனவும் தன்னை பாதுகாப்பு காவலரின் துப்பாக்கி எடுத்து  சுட்டுக் கொண்டார் என்பதும்  பதிவாகியுள்ளது. 

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் விஜயகுமார் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்த நிலையில் தகவல் அறிக்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் அவர் தூக்கம் வரவில்லை எனக்கூறி மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe