பிஸ்கட் நடுவே கஞ்சா.. கோவை மத்திய சிறைக்கு வந்த பார்வையாளர்கள் சிக்கியது எப்படி..?

published 1 year ago

பிஸ்கட் நடுவே கஞ்சா.. கோவை மத்திய சிறைக்கு வந்த பார்வையாளர்கள் சிக்கியது எப்படி..?

கோவை: மத்திய சிறைக்கு பிஸ்கட்டின் நடுவே கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மத்திய சிறையில் கைதுகளாக இருப்பவர்கள் முகி(எ) முஜிபூர் மற்றும் ரோஷன் பரித். இவர்களை காண்பதற்கு சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய இருவர் நேற்று சென்றுள்ளனர்.

அப்போது சிறையின் ஜெயலர் இவர்கள் எடுத்து வந்த உடமைகளை சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட்டில் பிஸ்கட்டின் நடுவே கஞ்சாவை வைத்து எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் கைதிகளாக இருந்த இருவரையும் அழைத்து இது குறித்து விசாரிக்கும் பொழுது சேதுராமன் மற்றும் சூரிய பிரகாஷ் இருவரும் கைதிகளாக உள்ள இருவருக்காக கஞ்சாவை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பிஸ்கட் பாக்கெட்டில் இருந்த நான்கு கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த ஜெயலர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் கஞ்சாவை எடுத்து வந்த சேதுராமன், சூரிய பிரகாஷ் உட்பட கைதிகளாக உள்ள முஜிபூர் மற்றும் ரோஷன் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe