கனிமவள கொள்ளை குறித்து கோவை ஆட்சியரிடம் மனு

published 1 year ago

கனிமவள கொள்ளை குறித்து கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: 

கனிமவள கொள்ளை குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  பீப்பிள் ஆஃப் கோயம்புத்தூர் (PEOPLE OF COIMBATORE) அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் என பலரும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கனிம வளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பீப்பிள் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், "சுயநலனுக்காக கனிம வளங்களை வெட்டி எடுப்பதை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும், கல்குவாரியில் பயன்படுத்தும் வெடி மருந்துகளால் கற்பாறைகள் விவசாய நிலத்தில் விழுவதை கட்டுப்படுத்த வேண்டும், அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் கனிம வளத்தை எடுக்கும் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், இரவு நேரங்களில் செயல்படும் குவாரிகளின் உரிமைக்கு ரத்து செய்ய வேண்டும், கனிமவள கடத்தலுக்கு துணை போகும் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், போலி அனுமதி சீட்டு பயன்படுத்தும் உரிமையாளர்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும், கனிம வள கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை தடுத்து நிறுத்தும் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது, மனித விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிர் பிரிந்தால் 50 லட்சம் பிறப்பீடு தர வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe