நானும் அண்ணாமலையும் அக்கா தம்பி போல் சேர்ந்து கட்சியை வளர்த்துகிறோம்- வானதி சீனிவாசன்..!

published 1 year ago

நானும் அண்ணாமலையும் அக்கா தம்பி போல் சேர்ந்து கட்சியை  வளர்த்துகிறோம்- வானதி சீனிவாசன்..!

கோவை

 

கோவை ராம்நகர் பகுதியில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் செய்வதற்கான திட்டம் துவங்கியுள்ளதாகவும், 
மாணவிகளுக்கு நோய் கண்டரியப்பட்டால் சிகிச்சை அளிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கல்யாண மேடைகளை எதிர்க்கட்சிகளை திட்டவே தமிழக முதல்வர் பயன்படுத்துகிறார் என்றும் ஆட்சிக்கு பங்கம் வந்தால் கூட பரவாயில்லை என முதல்வர் பேசியிருப்பதாக கூறிய அவர் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் நடக்கும் என்கிற பயம் வந்துவிட்டதா என கேள்வி எழுப்பினார்.

 மேலும் மோடி பயப்படுகிறார் என முதல்வர் சொல்வது முதல்வரின் கற்பனை எனவும் டாஸ்மாக் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, லஞ்சம், ஊழல் போன்றவற்றை குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பது முழுவதும் கற்பனை மற்றும் உண்மையில்லாத விஷயங்கள் எனவும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் கவர்னர் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோவம் வருகிறது எனவும் கூறினார். 

மேலும் மேடை நாகரீகம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் தான் திராவிட தலைவர்கள் என கூறிய அவர்  ஆளுநர்கள் அரசியல் பேசுவது என்பது அவர்கள் வரம்பை மீறி போவதில்லை என்றார். மேலும் எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அக்காவும் தம்பியும் சேர்ந்து கட்சியை வளர்த்துகிறோம் என்றும் கோவை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவது குறித்து கட்சி முடிவு செய்யும் எனவும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe