தமிழகத்தில் ஒ.இ மில்கள் வேலை நிறுத்தம்.. என்ன காரணம்..? என்ன பாதிப்பு..?

published 1 year ago

தமிழகத்தில் ஒ.இ மில்கள் வேலை நிறுத்தம்.. என்ன காரணம்..? என்ன பாதிப்பு..?

கோவை:

திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் ஒபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் என்று அழைக்கப்படக்கூடியது கழிவுப் பஞ்சாலைகள் இயங்காது என்று மில்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கழிவு பஞ்சுகளை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் விரிப்புகள், மேட், திரைச்சீலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கழிவு பஞ்சாலைகளில் இருந்து கிடைக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 600க்கும் அதிகமான கழிவு பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

கோவையில் சுமார் 400 கழிவு பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கழிவு பஞ்சாலைகளை நம்பி நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக ஒரு லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர்.

கடந்த சில  நாட்களாக கழிவு பஞ்சின் விலையேற்றம் மற்றும் மின் கட்டண உயர்வால் பஞ்சாலை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மில்கள் நடத்த முடியாமல் மூடுவிழா கண்டுவிட்டதாக ஜவுளித் தொழில் முனைவோர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மின் கட்டண உயர்வை திரும்பப்பெறுதல், கோம்பர் பஞ்சு விலையை கட்டுப்படுத்த கோருதல், கழிவு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதித்தல் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் கொடுக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe