கோயும்புத்தூர் உடன் போட்டி போடும் மதுரைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்

published 1 year ago

கோயும்புத்தூர் உடன் போட்டி போடும் மதுரைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்

 கோவை தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ஒவ்வொரு மாவட்டமும் பல புதிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களை நீண்ட கால வளர்ச்சி அடிப்படையில் தமிழ்நாட்டின் 2ஆம் தர நகரங்களில் அமைக்கத் தயாராகியுள்ளது.


அமெரிக்காவின் முன்னணி மற்றும் பிரபலமான Genpact நிறுவனம் இந்தியாவில் பல நகரங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் உடன் இயங்கி வந்தாலும் , தற்போது தனது புதிய அலுவலகத்தை மதுரையில் திறந்துள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியிலும், பட்டதாரி மாணவர்கள் மத்தியிலும் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது.
 

மதுரையில் அமைக்கப்பட்டு உள்ள Genpact நிறுவனத்தின் புதிய டெலிவரி சென்டர் மூலம் சில நூறு பேருக்கு மட்டுமே தற்போது வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அடுத்த சில வருடத்திலேயே 1000த்திற்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இந்த அலுவலகத்தின் மூலம் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் இதற்கு முன்பு Solaris தனது கேபிஓ வர்த்தகத்தை செய்து வந்த அலுவலகத்தில் தான் தற்போது Genpact நிறுவனத்தின் புதிய டெலிவரி நிலையத்தைத் திறந்துள்ளது. இந்த நிலையில் Solaris தற்போது புதிய அலுவலக இடத்தை தேடி வருகிறது, இதன் மூலம் கோயம்புத்தூர்-க்கு நிகராக மதுரையில் Office Space ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடுபடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரைக்கு கடந்த சில வருடத்தில் சிறிதும் பெரிதுமாக பல டெக் நிறுவனங்கள் வந்து குவிந்துள்ளது, இதனால் அலுவலகங்கள் கட்டமைப்பும் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது.

இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதற்கு ஏற்றார்போல் பெரிய பிராண்ட் கடைகளின் எண்ணிக்கையும், வருகையும் அதிகரித்துள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe