கங்கா செவிலியர் கல்லூரி - 30 ம் ஆண்டு, மண்டல அளவிலான டாஸ்னாகாம் கலை, மற்றும் கலாச்சார போட்டிகள்..!

published 1 year ago

கங்கா செவிலியர் கல்லூரி - 30 ம் ஆண்டு, மண்டல அளவிலான டாஸ்னாகாம் கலை, மற்றும் கலாச்சார போட்டிகள்..!

கோவை:

கோவை துடியலூர் அடுத்த வட்டமலையாம் பாளையம் பகுதியில், உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், 30 ம் ஆண்டு, மண்டல அளவிலான டாஸ்னாகாம் கலை, மற்றும் கலாச்சார போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது,

கோவை துடியலூர் அடுத்த வட்டமலையாம் பாளையம் பகுதியில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், இன்று, 30வது, மண்டல அளவிலான, டாஸ்னாகாம் கலை மற்றும் கலாச்சார போட்டிகள் நடைபெற்றது இதன் துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கங்கா மருத்துவமனையின், இயக்குநர் டாக்டர் ராஜா சபாபதி, கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்தார். 5வது மண்டல ஒருங்கிணைப்பாளர் டாஸ்னாகாம், சார்பாக டாக்டர் எஸ்தர் ஜான், தலைமை தாங்கினார் இதனைத் தொடர்ந்து செவிலிய மாணவர்களின் மேம்பாட்டின் சவால்கள் தொகுப்பு, பற்றி விளக்க உரையாற்றினர்.

இதில், கோவை மற்றும் நீலகிரி, மாவட்டத்தில் உள்ள 35 செவிலியர் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், கலந்து கொண்டு, சிகை அலங்காரம், காய்கறி செதுக்குதல், கோலமிடுதல், பேச்சு போட்டி நடனம், கட்டுரைப் போட்டி, என 16 வகையான தனி நபர், மற்றும் குழுவாகக் கலந்து கொண்டனர், இதனைத் தொடர்ந்து, இதில் சிறப்பாகப் பங்கு பெற்ற செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சூப்பர் நோவா, என்ற கோப்பை வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்வில், தேசிய செவிலியர் சங்கத்தின் ஐந்தாவது மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயசுதா, தமிழ்நாடு மாநில தலைவர் ஆனி கிரேஸ் கலைமதி, கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர்கள் ரமா ராஜசேகரன், கங்கா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கனகவல்லி சண்முகநாதன், கங்கா மருத்துவமனையின் தலைவர், கேஜி சண்முகநாதன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe