கோவையில் ஹீரோ இருசக்கர வாகனத்தின் புதிய கிளை : வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி

published 1 year ago

கோவையில் ஹீரோ இருசக்கர வாகனத்தின் புதிய கிளை : வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி

கோவை: வசந்தி மோட்டார்ஸின் புது ஷோரூம் சுங்கம் பகுதியில் துவங்கியது. இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல இருசக்கர வாகன டீலரான வசந்தி மோட்டார்ஸின் புது ஷோரூம் 'ஹீரோ மோட்டார்ஸ்' வெள்ளிக்கிழமை சுங்கம் ராமநாதபுரம் பகுதியில் துவங்கியது.

இத்துறையில் 12 வருடங்களாக உள்ள வசந்தி மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே கோவையில் 3 ஷோரூம்கள் உள்ள நிலையில் இந்த  ஷோரூம் இதன் 4வது ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 7,000 சதுரடி கொண்ட கிளையில் ஒரு ஷோரூம், ஒரு சர்விஸ் சென்டர் மற்றும் ஒரு ஸஃபர் பார்ட்ஸ் விற்பனை மையம் அனைத்தும் உள்ளது.இங்கு வழக்கமான அணைத்து ஹீரோ இரு சக்கர வாகனங்களுடன் ஹீரோவின்  'வீடா' வகை எலக்ட்ரிக் வாகனங்களும் விற்பனைக்கு உள்ளது.

இந்த ஷோரூமை சிறப்பு விருந்தினரான கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஷோரூமை வசந்தி மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர்  பிரேம் ஆனந்த முன்னிலையில் துவக்கி வைத்தார்.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தென்மண்டல தலைவர் ராமு பிரகாஷ் ராவ் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.ஹீரோ மோட்டோ கார்ப்-ன் சீனியர் ஏரியா மேனேஜர் தியாகராஜன் இந்த கிளையில் உள்ள ஒர்க் ஷாப்பை துவக்கி வைத்தார்.

இந்த திறப்பு விழாவில் எம்.சி.பி குழுமம் மற்றும் வசந்தி மோட்டார்ஸ் குழுமத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.இந்த திறப்பு நாளில் 20 வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்பதிவு செய்த ஹீரோ வாகனங்களை டெலிவரி எடுத்துக்கொண்டனர்.

திறப்பு விழா சலுகையாக இம்மாத இறுதி வரை ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe