சந்திராயன் -3 விண்ணில் பாய்ந்ததை பார்த்த கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்!!!!.

published 1 year ago

சந்திராயன் -3 விண்ணில் பாய்ந்ததை பார்த்த கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்!!!!.

கோவை : ஸ்ரீஹரிகோட்டா இராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 விண்ணில் பாய்ந்த நிகழ்வை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீரணத்தம் பள்ளி மாணவர்கள் நேரில் கண்டு களித்தனர்.

மேலும் அங்கே உள்ள காட்சியகத்தில் (Gallery) பார்வைக்கு வைக்கபட்டிருந்த இஸ்ரோவின் இராக்கெட், செயற்கைக்கோள் மாதிரிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்தனர்.

நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்ட நிகழ்வில் இவர்களும் பங்கேற்று பயன்பெற்றனர்.

மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் வானியல் பற்றிய ஏராளமான அனுபவத்தைப் பெற்றுத் தந்தது இந்தப் பயணம்.
கோவை RAAC அமைப்பு இந்தப் பயணத்திற்கான செலவை ஏற்றுக் கொண்டது.`

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe