கோவை திருப்பூர்- அவினாசி பைபாஸ் சாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலின் 18 வது கிளை துவக்கம்.

published 1 year ago

கோவை  திருப்பூர்- அவினாசி பைபாஸ் சாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலின் 18 வது கிளை துவக்கம்.

கோவை : 55 ஆண்டுகளாகச் சைவ உணவு பிரியர்கள் மனம் கவர்ந்த கோவையின் பெருமையான 'ஸ்ரீ அன்னபூர்ணா' உணவகத்தின் 18 வது கிளை திருப்பூர்- அவினாசி பைபாஸ் சாலை அருகே வெள்ளிக்கிழமை (14.7.2023) அன்று  இனிதே துவங்கியது.

12,000 சதுர அடி கொண்ட இந்த புதிய கிளை முழுமையாக ஏ.சி. வசதி கொண்ட இந்த கிளையின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் டைனிங் ஏரியா உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து உணவு உண்ண முடியும்.

மேலும் தரை தளத்தில் பிரத்தியேக இனிப்பு மற்றும் பலகார விற்பனை மையம் உள்ளது.இங்கு 160 வகை இனிப்புகள்  30 வகை கார வகைகளையும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் சௌகரியத்திற்காக ஒரே நேரத்தில் 50 கார்கள் நிறுத்தக்கூடிய இட வசதி வழங்கப்பட்டுள்ளது.
 

இந்த புதிய கிளையை SP அப்பேரல்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சுந்தர ராஜன் துவக்கி வைத்தார். இந்த புதிய கிளையைத் திருமதி. சக்திவேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

கிளையின் முதல் தளம் மற்றும் ஹாலை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. K.M. சுப்ரமணியன் மற்றும் கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் திரு. கே.பி. ராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த துவக்க விழாவில் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் தலைவர் திரு. ராமசாமி, துணை தலைவர் திரு. சுந்தரராஜன், நிர்வாக இயக்குனர் திரு. ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குனர் திரு. வெங்கடேஷ் பாபு, தலைமை செயல் அதிகாரி திரு. ஜெகன் எஸ். தாமோதரசாமி, எக்சிகியூடிவ் டைரக்டர் திரு.விவேக் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

KEC கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் கிளையின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.  அதை கிரிஸ்டல் கிளோத்திங் நிறுவனத்தின் தலைவர் திரு.வெங்கடபதி பெற்றுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe