ஆடி மாதத்தில் இரண்டு தினங்களில் (ஜூலை -17, ஆகஸ்ட்-16) அமாவாசை வருகிறது. இவற்றில் எந்த நாளை ஆடி அமாவாசையாக ஏற்பது?

published 1 year ago

ஆடி மாதத்தில் இரண்டு தினங்களில் (ஜூலை -17, ஆகஸ்ட்-16) அமாவாசை வருகிறது. இவற்றில் எந்த நாளை ஆடி அமாவாசையாக ஏற்பது?

கோவை : ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாள். இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் எந்த அமாவாசை நாளினை தர்ப்பணம் தர நாம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மூன்று அமாவாசைகள்: ஆறு மாதம் கொண்டது ஒரு அயனம். இரண்டு அயனம் கொண்டது நமக்கு ஒரு வருடம். அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்தராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.

வீடு தேடி வரும் முன்னோர்கள்: ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முன்னோர்களுக்கு வரவேற்பு: நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளய அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. 

நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ரு தர்ப்பணம்: ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். 

சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களையும் யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். 

அமாவாசை நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.




 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe