ஆடி அமாவாசை- ராசிகளுக்கான சுப பலன்கள்! தினசரி ராசிபலன்:

published 1 year ago

ஆடி அமாவாசை- ராசிகளுக்கான சுப பலன்கள்! தினசரி ராசிபலன்:

அனைத்து இராசிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

நாள்: 17-07-2023 தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, ஆடி 1, திதி அமாவாசை; நட்சத்திரம் புனர்பூசம்

ராகு - 7:46 AM – 9:19 AM
எமகண்டம் - 10:52 AM – 12:25 PM
குளிகை - 1:59 PM – 3:32 PM

இன்றைய ராசிப்பலன் - 17.07.2023

மேஷம்

தனவரவில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மனதில் துணிவோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். 

ரிஷபம்

நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மனதளவில் சிறு தயக்கத்துடனும், குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். இழந்த பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவதில் அனுகூலம் ஏற்படும். 

மிதுனம்

மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சபை பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.  மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அரசு பணிகளில் மாற்றம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும்.

கடகம்

சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். 

சிம்மம்

வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் ஏற்படும். காப்பீடு தொடர்பான புரிதல் மேம்படும். பணிபுரியும் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. திடீர் தனவரவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். 

துலாம்

நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். 

விருச்சிகம்

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பழமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பயணத்திற்கு தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. விவசாய பணிகளில் விவேகம் வேண்டும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். பணிகளில் முன்கோபமின்றி செயல்படவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

தனுசு

பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் உயர்வான சூழல் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும்.

மகரம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். சகோதரர் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.

கும்பம்

முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பார்வை தொடர்பான சில இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்வீர்கள்.

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

 

 

 

 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe