மீன் எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? இந்த 5 டிப்ஸ் மறக்காம கவனியுங்க..

published 1 year ago

மீன் எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? இந்த 5 டிப்ஸ் மறக்காம கவனியுங்க..

கோவை : மீன்களை சமைப்பதைவிட, அவைகளை கவனமாக பார்த்து வாங்குவதும், வாங்கி வந்ததை சுத்தமாக கழுவுவதிலும்தான் அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும். மீன் எப்படி வாங்க வேண்டும் தெரியுமா?

எனவே, குளிர்காலங்களில் நாம் எப்போது மீன்கள் வாங்கினாலும், அவை பதப்படுத்தப்பட்டதா? அல்லது புதிதாக கொண்டுவரப்பட்டதா? என்பதை கண்டுபிடித்து வாங்க வேண்டி உள்ளது.

வஞ்சிரம்: மீன்களிலேயே பெயரை மாற்றி சொல்லி விற்பது பல நடக்கிறது.. குறிப்பாக, வஞ்சரம் மீன் போலவே ஒரு மீன் இருக்கிறது.. "அரைகோலா மீன்" என்று சொல்பார்கள்.. இந்த அரைகோலாவை பார்ப்பதற்கு, அப்படியே வஞ்சிரத்தை போலவே இருக்குமாம்.. அடையாளமே கண்டுபிடிக்க முடியாதாம்.. ஆனால் சுவை வஞ்சிரத்துக்கு நேர் மாறானது. அதனால் கவனமாக பார்த்து ஒரிஜினல் வஞ்சிரம் வாங்க வேண்டும். அதேபோல, பிற மீன்களை கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.. நிறைய ஈக்கள் மொய்த்திருந்தால், அது புதிதாக கொண்டுவரப்பட்ட மீன் என்று அர்த்தம்.. மருந்துகளை தெளித்து வைத்திருந்தால், ஈக்கள் மொய்க்காது.. மீன்களில் மருந்து வாசம் தங்காமல் ஓடிவிடும்.

பழைய மீன்: மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவந்தா, அதை தவிர்த்துவிடலாம்.. சதைப்பகுதி கல் போல தடிமனாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதேபோல, புதிய மீனா? பழைய மீனா? என்பதை அந்த மீனின் கண்களை பார்த்தாலே தெரியும்.. பழைய மீன்கள் என்றால், மீனின் கண்கள் வெள்ளை கலரில் இருக்கும்.. புதிய மீன்களின் கண்ணில் வெள்ளை தெரியாது..

புதிய மீன்கள் பார்ப்பதற்கே கண்கள் பளபளப்பாக, சிவப்பாக சற்று வீக்கத்துடன் இருக்கும்.. ஆனால், கண்ணை சுற்றிலும், சிகப்பு படர்ந்து இருந்தால் அது பழைய மீன். வாங்க வேண்டாம். செவுள்கள்: ஆகவே, எந்த மீனாக இருந்தாலும் சரி, வெள்ளை கண்கள் என்றாலே, வாங்க வேண்டாம். ஒருவேளை அது ஐஸ்கட்டியில் வைத்ததாகவும் இருக்கலாம். புதிய மீன்கள்தான் என்பதை, செவுள்களை பார்த்து அடையாளம் காணலாம்..

மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பாக இருக்கும்.. ஒருவேளை வெள்ளை கலராக செவுள்கள் இருந்தாலும், வாங்க தேவையில்லை. அது பழைய மீனாக இருக்கலாம். செவுளை பிளந்து அந்த இடத்தை தொட்டு பார்த்தால் கைகளில் பிசின் போல உணர முடியும்.. அப்படி இருந்தால் அது ஃபிரெஷ் மீன். 

மீனின் தலைப்பகுதி: மீனின் தலைப்பகுதியைக் கைகளால் தூக்கி பார்த்தால், வால் பகுதி விரைப்பாக தெரிந்தால், அது ஃபிரஷ்ஷான மீன் என்று தெரிந்து கொள்ளலாம்.. மீனின் கழுத்தில் பிடிக்கும்போது எப்போதுமே விறைப்பாகவும், அதன் வால்பகுதி கடினமாக இருக்க வேண்டும்.. அதேபோல மீனின் சதைப்பகுதியை கை விரல்களால் அழுத்திப்பார்க்க வேண்டும்.. மீன் விரைப்பாக, தடிமனாக இருக்க வேண்டும். தொளதொளவென இருக்குமேயானால் அது கெட்டுப்போன மீன். செதில்கள் சிகப்பு நிறத்தில் இருக்க வேண்டும். செதில்கள் நிறைய இருக்க வேண்டும்.. ஆனால், எந்த மீணாக இருந்தாலும் 30 நிமிடம் சுத்தம் செய்தபின் கெட்டித் தயிரில் ஊறவிட்டு பிறகு, அலசி சமைத்தால் முற்றிலும் மீன்வாடை நீங்கிவிடவும்.. மீன் ஊற வைத்த தயிரை கொட்டிவிட வேண்டும்.. 

உப்பு + எலுமிச்சம் பழம்: அல்லது சுத்தம் செய்யப்பட்ட மீன்களை புளிக்கரைசலில் அல்லது எலுமிச்சை சாறு கலந்த நீரில் ஊறவைத்தால் சமைக்கும்வரையிலும் கெடாமல் இருக்கும். மீன்களை சுத்தம் செய்ததும் உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூன்று முறை அலச வேண்டும்.. ஒருவேளை ரசாயனங்கள் அதில் பூசப்பட்டிருந்தாலும் அவற்றால் ஏற்படுகிற விளைவுகள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 


 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe