கோவையில் சர்வதேச கராத்தே.. மலேசியா, சிங்கப்பூர், ஈரான் நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பு

published 1 year ago

கோவையில் சர்வதேச கராத்தே.. மலேசியா, சிங்கப்பூர், ஈரான் நாடுகளில்  இருந்து வீரர்கள் பங்கேற்பு

கோவை: கோவையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் மலேசியா, சிங்கப்பூர் ஈரான், ஈராக்,ஓமன், உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர்.

கராத்தே மாணவர்களை சர்வதேச தளத்தில் உயர்த்தும் விதமாக கோவையை அடுத்த மாதம்பட்டியில் 5 வது சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 

தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் துவக்கி வைத்தார். இதில் 5வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டா, குமித்தே என இரு பிரிவுகளாக போட்டிகள்  நடைபெற்றது.

இந்த சர்வதேச கராத்தே போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஈரான், ஈராக், ஓமன், உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe