கோவையில் தொழில்சார் வளர்ச்சி, நிதி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

published 1 year ago

கோவையில் தொழில்சார் வளர்ச்சி, நிதி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை: கோவை மாவட்டம் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படும் கரியம்பாளையம் மகளிர் வாழ்வாதார மையத்தில் காலியாக உள்ள தொழில்சார் வளர்ச்சி அலுவலர், தொழில்சார் நிதி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.

தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான தகுதிகள் :
ஏதேனும் ஒருமுதுகலை பட்டத்துடன் கணிணி அறிவு பெற்றிருத்தல் வேண்டும். 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஊரகதொழில்கள், தொழில்கள் மேலாண்மை மற்றும் நிதி சேவைகள் குறித்த நடவடிக்கைகளில் அனுபவம்.

தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த முன் அனுபவம் பெற்று இருத்தல் வேண்டும். இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும். 

தொகுப்பூதியம் மாதம் ஒன்றிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பெண்கள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து பணியாளர்களுடன் ஒருங்கிணைத்து பணியாற்றுதல் வேண்டும்.
 

விண்ணப்பங்கள் பெற மற்றும் சமர்பிக்க வேண்டிய முகவரி, உதவி இயக்குநர், மாவட்டசெயல் அலுவலர், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, 2வது தளம், பூமாலை வணிக வளாகம், கோணியம்மன் கோவில் எதிரில் பெரிய கடை வீதி, கோவை- 1. தொலைபேசி எண் : 0422 - 2300633, செல்: 93852 - 99734, 9788174847. இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

__

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe