உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு..!

published 1 year ago

உரிமம் இல்லாத மதுபான கடை, மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு..!

கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாத மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உரிமம் இல்லாத மதுபான கடைகள் மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில் அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அருகிலும் உரிமம் வழங்காமல் மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும், மேலும் அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் நடைபெற்று வருவதாகவும் இதனால் அப்பகுதியில் மது அருந்துபவர்களால் அடிக்கடி தகராறுகள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

 மேலும் அப்பகுதியிலேயே உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் நடமாட முடியாத சூழல் நிலவி வருவதாகவும் எனவே உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நம்ம ஊரு கனெக்ஷன் விளையாட்டு  NO.6 .. கோவையில் உள்ள ஒரு பகுதியின் பெயர்.. கண்டுபிடியுங்க… விடை இன்று பதிவாகும் அடுத்தடுத்த செய்திகளுக்குள் இடம்பெறும்.. 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe