துடியலூரில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சி : நேரில் சென்ற மாவட்ட கண்காணிப்பாளர்

published 1 year ago

துடியலூரில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்  நிகழ்ச்சி  : நேரில் சென்ற மாவட்ட கண்காணிப்பாளர்

கோவை:  துடியலூரில் நடைபெற்ற ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த ஆண்டு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 1,300 பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் மாற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில்  ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.0 என்ற திட்டத்தை தொடங்கி இதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கான பாலியல் ரீதியான விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அசோகபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 80 மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் காணொளி காட்சி மூலம் (Cartoon Videos )துடியலூர் காவல் துறையினர்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் பள்ளி குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதனை யாரிடம் தெரிவிக்க வேண்டும் எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.\

நம்ம ஊரு கனெக்ஷன் 8வது கேள்விக்கான விடை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe