இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கும்பலாக பாலியல் வன் கொடுமை செய்த கொடூரம் ; சங்கர் ராஜரத்தினம் பதிவு

published 1 year ago

இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கும்பலாக பாலியல் வன் கொடுமை செய்த கொடூரம் ; சங்கர் ராஜரத்தினம் பதிவு

மணிப்பூர் இன்று ஒரு வீடியோ வெளியாகி பெரிய ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது..!

மணிப்பூரில் இரண்டு முக்கிய ஜாதிப்  பிரிவினர். அதில் ஒன்று பெரிய கூட்டம்,  இன்னொன்று மலைவாழ் சின்ன கூட்டம். சின்ன கூட்டத்திற்கு  மட்டுமே Tribals என்ற சலுகைகள் இருந்த நிலையில், பெரிய கூட்டப்  பிரிவினர்  போராட்டம் செய்து, தமக்கும்  Tribals சலுகைகள் பெற்றனர். அதை எதிர்த்து  சின்னக்கூட்ட   பிரிவினர் போராட, அவர்களை எதிர்த்து இவர்கள் போராட, இப்படீ போராட்டம்  வளர்ந்து,  பெரிதாகி, வெடித்து,  இரு குழுவினருக்குள்ளும் அடிதடி... சண்டை... வெட்டு... குத்து... ரத்தம்... வன்முறை..!

இது, மனித குழுக்கள்/ஜாதிகள்/பிரிவுகளிடையே வளர்க்கப்படும்  பரஸ்பர வெறுப்பால், அதில் பெருகும் விரோதத்தால்,  உருவான சண்டை..! பச்சையப்பா & ப்ரெஸ்டென்ஸி காலேஜ் பசங்களிடையே நடக்குமே அது போன்று  'தூண்டி விடப்பட்ட' குழுச் சண்டை..! அதை  இந்த அளவிற்குப் போக விட்டது மணிப்பூர் பா.ஜ.க அரசு.

மணிப்பூரில் ரெண்டரை மாதமாக கலவரம்  நடக்கிறது. நூற்றுக்கணக்கில்  உயிர்பலி, சொத்துகள் சேதாரம்..!     இண்டெர்னெட் தடை செய்யப்பட்டது. நேற்று இண்டெர்னெட் அனுமதிக்கபட, மே 4, கலவரம் தொடங்கிய அடுத்த நாள் நடந்த ஒரு  நிகழ்வின் வீடியோ  வெளியாகி,  எல்லோரையும் இன்று  பதைபதைக்க வைத்திருக்கிறது..!

ரெண்டு பிரிவினரில் ஒரு பிரிவைச் சேர்ந்த இரண்டு பெண்களை முழு நிர்வாணமாக்கி ரோட்டில் நடத்திக் கொண்டு போய், வெட்டவெளியில்  இன்னொரு பிரிவைச் சேர்ந்த 25க்கும் அதிகமான ஆண்கள்  கற்பழித்திருக்கும் வீடியோ. கண்டு நாடே கொதித்துப் போய் கிடக்கிறது..! எந்த அளவு வெறுப்பு இருந்தால் இப்படி செய்யவும் அதை வீடியோ எடுக்கவும் முனைவார்கள்..? அதிர்ச்சியில் நம் உடம்பே உதறுகிறது..!

மணிப்பூர் கலவரம் உருவாகக் காரணம் மணிப்பூர் பிஜேபி அரசாங்கம் அல்ல. ஆனால் கலவரத்தைச் சரியாகக் கையாளாமல் விட்டு பெரிய ரணகளமாக்கிய திறமையின்மை  அரசினுடையது..! மணிப்பூர் அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் போவதாக சில நாட்கள் முன்னர் பேசப்பட்டது. ஆனால் அதைச் செய்யவில்லை பிஜேபி. இப்போதாவது செய்ய வேண்டும்..!


நண்பர்களே..!

மனித  நேயம்  என்பது முக்கியம்..!  என்னதான் சமூக, அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், கண்ணியக் கோட்டை நாம் தாண்டாமல் இருக்கும் வரைதான் அது  வாழ்க்கை. இல்லையென்றால் பரஸ்பர வெறுப்பு வளர்ந்து, அது  எங்கு போய் நிற்கும் சொல்ல முடியாது,  மணிப்பூர் ஆகலாம்.

இங்கே  முகநூல் அரசியல் பதிவுகளின் கமெண்ட்டுகளிலேயே சிலரின் மூர்க்க வெறுப்பைக்  கண்டால் நமக்கு கவலை வருகிறது..! தனக்குப் பிடிக்காத அரசியல் கருத்து என்பதால்  கண்ணியமற்று  அநாகரிக வார்த்தைகளில்  கமெண்ட் இடுவோருக்கும்,  பெண்களை மானபங்கப் படுத்தியவர்களின்  செய்கைக்கும் ஒரே காரணம்தான் அடிப்படை : வெறுப்பு..!


சங்கர் ராஜரத்தினம்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe