சுட சுட முட்டை பக்கோடா ரெடி !

published 1 year ago

சுட சுட முட்டை பக்கோடா ரெடி !

மாலையில் டீ, காபியுடன் சாப்பிடுவதற்கு எப்போது ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலே  சுட சுட முட்டை பகோடா,ஒரு முறை இப்படி மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் பக்கோடாவை சாப்பிட்டு பாருங்க. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் அடுத்தமுறையும் இதை செய்ய சொல்லி கேட்பார்கள், அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

அதனால் இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை  நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :

முட்டை வேகவைத்து  - 5

கான்ப்ளவர் மாவு டேபிள் ஸ்பூன்   - 2

அரிசி மாவு  டேபிள் ஸ்பூன் - 2

கறிமசாலா தூள் டீஸ்பூன்  - 1

மிளகாய் தூள் டீஸ்பூன்  - 1

 பூண்டு விழுது  டீஸ்பூன்  - 1 

உப்பு தேவையான அளவு 

எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை

செய்முறை:

1.முதலில் முட்டையை வேகவைத்து தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.

2. அடுத்து ஒரு கப்பில் கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு, கறிமசாலா தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

3. வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து பகோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் .

4.பிறகு ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து  சுவைத்து பார்க்கவும் .

           

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe