சிறுதானிய ஐஸ் க்ரீம், முருங்கைக்கீரை பிஸ்கட்.. அசத்தலான ஸ்நாக்ஸ் தயாரிக்கும் கோவை இளைஞர் | Photo Story

published 1 year ago

சிறுதானிய ஐஸ் க்ரீம், முருங்கைக்கீரை பிஸ்கட்.. அசத்தலான ஸ்நாக்ஸ் தயாரிக்கும் கோவை இளைஞர் | Photo Story

கோவை:  கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுதானியங்களில் இருந்து ஐஸ்கிரீம் மற்றும் பேக்கரி உணவு வகைகளை தயாரித்து அசத்தி வருகிறார்.

தித்திப்பான சுவையுடன் ஜில்லென்று இருக்கும் ஐஸ்கிரீம்கள் பிடிக்காத ஆட்களே இல்லை. இத்தகைய ஐஸ் கிரீம்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவதுண்டு.

அப்படிப்பட்ட ஐஸ்கிரீம் பிரியர்களுக்காக, சத்தான சுவையான ஐஸ்கிரீம்களை தயாரித்து வருகிறார் கோவை சேர்ந்த இளைஞர்.

ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ஜீவன் நியூட்ரி ஃபுட்ஸ் என்ற பெயரில் ராகி, வரகு, சோளம் ,குதிரைவாலி, சாமை உள்ளிட்ட ஐந்து வகையான சிறு தானியங்களை கொண்டு ஐஸ்கிரீம்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.

கடந்த 1961 ஆம் ஆண்டு பிரவீனின் தாத்தா தொடங்கிய இந்த நிறுவனத்தில் பேக்கரி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நிறுவனத்தை கையில் எடுத்த பிரவீன் சத்தான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்வது என்று முடிவெடுத்தார்.

அதன்படி சிறுதானியங்களை கொண்டு ஐஸ்கிரீம் வகைகள், முருங்கைக் கீரை கொண்டு தயாரிக்கப்பட்ட குக்கீஸ், சிறுதானிய கேக் வகைகள், ஆப்பிள், கேரட் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஹெல்த் மிக்ஸ், சிறுதானிய பிரியாணி மிக்ஸ் சிறுதானிய பொங்கல் மிக்ஸ் சிறு தானிய சட்னி மிக்ஸ் உள்ளிட்ட உடலுக்கு சத்தான பல்வேறு உணவு வகைகளை தயாரித்து வருகிறார்.

இந்த பொருட்கள் தரமானதாகவும், சுவை மிகுந்ததாகவும் உள்ளன. இது தவிர வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஐஸ்கிரீம் வகைகளில் நாட்டு சர்க்கரை மற்றும் பனங்கற்கண்டு கொண்டு தயாரித்து விற்பனை செய்கிறார்

50 கிராம் எடையுடைய ஐஸ்கிரீம் 50 ரூபாய்க்கும், சிறு தானிய கேக் வகைகள் 20 ரூபாய் முதலும் இவரிடம் கிடைக்கின்றன. இந்த சிறுதானிய ஐஸ்கிரீம் மற்றும் சத்தான உணவு வகைகளை டேஸ்ட் செய்ய 7845753896 என்ற எண்ணை அழைக்கலாம்..

நியூஸ் க்ளவுட்ஸ் பெயரை சொன்னால் சிறப்பு சலுகை தருவதாக தெரிவித்துள்ளார் பிரவீன்.. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe