நாளை கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல்..!

published 1 year ago

நாளை கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல்..!

கோவை: தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் மாமன்றக் கூட்டத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் தொடர்பாக கடந்த 14ம் தேதியன்றே 100 வார்டு கவுன்சிலர்களுக்கும் அறிவிப்பு வழங்கி ஒப்புகை பெறப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் நடைபெறுவதற்குரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கவுன்சிலர்கள் அனைவரும் நாளை காலை 9.30 மணிக்குள் தவறாது மாமன்ற கூட்டத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நேர்வில், அந்த உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்.
போட்டியிருப்பின், மறைமுகத்தேர்தல் மூலம் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதைத்தொடர்ந்து தேர்தல் செயல்முறைகள் மற்றும் முடிவுகள் பற்றிய அறிக்கை, தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், கமிஷனருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe