கோவையில் விநாயகர் சதுர்த்திக்கு 10008 சிலைகள் அமைக்க முடிவு

published 1 year ago

கோவையில் விநாயகர் சதுர்த்திக்கு 10008  சிலைகள் அமைக்க முடிவு

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 8  விநாயகர் சிலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் , மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி ஆடி வெள்ளியை முன்னிட்டு இந்து அன்னையர் முன்னணி சார்பில் 1008 பெண்கள் பங்கேற்கும் அம்மன் மஞ்சள் நீர் அபிஷேக ஊர்வலம் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

மேலும் கோவை மாவட்டத்தில் 10,008 விநாயகர் சிலைகள், சதுர்த்தி விழாவை முன்னிட்டு   பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வில் திருவிளக்கு பூஜைகள், மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள்,குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்,  ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியவை நடத்தப்படும்.

தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆகஸ்டு 27-ந்தேதி கோவில்களில் உழவாரப்பணி நடைபெற இருக்கிறது. கோவை மாநகரில் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது என அவர் கூறினார்.

இந்த  இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்டச் செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ்வரன், ஆனந்த், ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe