கோவையில் கொரோனா அதிகரிப்பு : எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத்துறை.!

published 2 years ago

கோவையில் கொரோனா அதிகரிப்பு :  எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத்துறை.!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை:
கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்த 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா தொற்று இருந்து வந்தது.
 

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கில் இருந்து இரட்டை இலக்காக மாறியுள்ளது. கடந்த வாரங்களில் 3 முதல் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது 10 பேர் வரை தொற்று கண்ட றியப்பட்டு வருகிறது.



இதனால் மாவட்டத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது, கொரோனா காரணமாக ஆஸ்பத்தரிகளில் 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் 2,617 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது,
கோவை மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்துசெல்ல வேண்டும். 

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe