இரவில் மட்டும் மலரும் நிஷா காந்தி பூ கோவையில் மலர்ந்தது

published 1 year ago

இரவில் மட்டும் மலரும் நிஷா காந்தி பூ கோவையில் மலர்ந்தது

கோவை : கோவையில் கிணத்துக்கிடவு பகுதியில் சிவபெருமானுக்கு விருப்பமான மலராக உள்ள நிஷாகந்திப் பூ பூத்துள்ளது. இது  பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும். இந்த பூ மிகுந்த மணம் கொண்டது. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

இதன் சிறப்பு என்னவென்றால்  இரவு நேரம் பூத்து அதிகாலையில் வாடிவிடும். இந்த நிலையில் கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் ஒருவரது வீட்டில் நிஷாகந்தி செடி வளர்க்கப்பட்டு வருகிறது. 

இந்த செடியில் நேற்று முன்தினம் இரவில் 36 பூ பூத்தது. பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில்  இந்த அதிசய பூக்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் வழிபாடு நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe