கோவையைக் கலக்கும் பிரம்மாண்ட மீடியா டவர்!

published 1 year ago

கோவையைக் கலக்கும் பிரம்மாண்ட மீடியா டவர்!

கோவை : கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த பிரம்மாண்ட மீடியா டவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

நம்ம கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளும் தற்போது மேலை நாடுகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு உள்ளன.

அழகான குளக்கரைகள், சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், ரேஸ்கோர்ஸ் நடைபாதை, புதிய மேம்பாலங்கள் எனக் கோவை அடுத்த 'லெவலுக்கு' சென்று கொண்டிருக்கிறது. 

இதனிடையே ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து ரெட் பீல்ட்ஸ் செல்லும் வழியில் தாமஸ் பார்க் அருகே  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான மீடியா டவர் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்த மீடியா டவரின் உச்சியில் தெற்கு ஆசியாவில் முதன்முறையாகப் பொதுமக்களைக் கவரும் வகையில் சராசரியாக 8.15 மீ சுற்றளவு மற்றும் 1.70 மீட்டர் உயரமுள்ள காணொலி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த காணொலி அமைப்பில் நேரடி காணொலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மொத்த அமைப்பையும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்குமாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மீடியா டவரில் முழு பணிகளும்  நிறைவடைந்தது தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான மீடியா டவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe